ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்
1 min read
Public Grievance Meeting at Ranipet District Police Office
18.10.2023
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V.கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 41 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் குமார் (இணையவழி குற்றப்பிரிவு) ஆகியோர் உடன் இருந்தனர்
– சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.