ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
1 min read
Students Protest Against Pakistan Govt in Occupied Kashmir
18.10.2023
பாகிஸ்தான் அரசு ராணுவத்துக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
மின்சார கட்டணம், எரிபொருள், உணவு பொருள் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, தீவிரவாத குழுக்கள் சுதந்திரமாக சுற்றி திரிவது ஆகியவற்றால் போராட்டங்கள் நடக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு ராணுவத்துக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்து பாகிஸ்தான் அரசாங்கம், ராணுவ அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பலர் அப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.