திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டிரோன் மூலம் சோதனை
1 min read
The enforcement officials conducted a drone search in the Kosasthalai river near Tiruvallur
18.10.2023-
கொசத்தலை ஆற்றில் அரசு மணல் குவாரியில் முறைகேடுகள் தொடர்பாக துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத் துறையினர் டிரோன் மூலம் ஆற்றில் கண்காணிப்பு மேற்கொண்டனர்.
மணல் குவாரி
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொசத்தலை ஆற்றில் தமிழ்நாடு அரசு சார்பில் மணல் குவாரி செயல்பட்டு வருகின்றது. ஆற்றில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அள்ளப்படும் மணல் லாரிகளில் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள யார்டில் சேமித்து வைத்து லாரிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு விதிமுறைகளை மீறி மணல் விற்பனை நடைபெற்று வருவதாகவும் ஆற்றில் அதிக அளவில் மணல் தள்ளப்படுவதாக புகார்களின் பெயரில் கடந்த மாதம் 12ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் குவாரியில் அதிரடி சோதனை மேற்கொண்டு முறைகேடுகள் தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றினர்.
இதை தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வரும் நிலையில் இன்று துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் மணல் அள்ளப்பட்ட இடத்தில் அதன் பரப்பளவு ஆழம் குறித்து ட்ரோன் கேமரா மூலம் அளவீடு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில் எத்தனை யூனிட் மணல் ஆற்றில் இருந்து அருளப்பட்டுள்ளது. முறைகேடு நடைபெற்று உள்ளதா என்பதை குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.