July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே இலவச மருத்துவ முகாம்

1 min read

Free medical camp near the Kadayam

19.10.2023
கடையம் அருகே இலவச மருத்துவ முகாம்
நடந்தது.

மருத்துவ முகாம்

கடையம் அருகே உள்ள ஆசீர்வாதபுரம் பரி பேதுரு ஆலய வளாகத்தில் கடையம் பாரதி அரிமா சங்கம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், டாக்டர் அகர்வர்வால் கண் மருத்துவமனை மற்றும் தென்காசி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக பெடரல் வங்கி கிளை மேலாளர் பொன்னம்மாள், கடையம் பாரதி அரிமா சங்க தலைவர் காளிதாஸ் என்ற பீம்சிங், ஆசீர்வாதபுரம் ஆசீர் மோசஸ்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் தென்காசி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் பாரதிராஜன், பாத்திமா, அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் மாணிக்கம் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் மற்றும் கண் பரிசோதனை இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் கேன்சர் விழிப்புணர்வு படக்காட்சி ஒளிபரப்பபட்டது. முகாமில், கடையம் பாரதி அரிமா சங்க செயலாளர் தயாள லெட்சுமணன் என்ற முரளி, பொருளாளர் ஆசிரியர்ி கோபால், குமரேசன், இந்திரஜித், முருகன், இளங்கோ, அழகுதுதுரை, அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், தமிழ்தென்றல் ஆ.சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.