தென்காசியில் உதவி ஆய்வாளரை தாக்கிய 2 பேர் கைது
1 min read
2 arrested for assaulting Assistant Inspector in Tenkasi
25.10.2023
தென்காசியில் திருநங்கைகளிடம் தகராறு செய்தவர்களை தட்டிக்கேட்ட உதவி ஆய்வாளரை தாக்கிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தாக்குதல்
தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் ஆல்பா வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திருநங்கைகளிடம் தகராறு செய்து கொண்டிருந்த நபர்களை விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் மற்றும் காவலர் அல்போன்ஸ் ராஜா ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்
தகவல் அறிந்த தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன்
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த இரண்டு நபர்களையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பகுதியை சேர்ந்த மாரிச்சாமி என்பவரது மகன் முத்துக்குமார் (வயது26), அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சுப்பையா (வயது 36) என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து
அவர்கள் இருவரும் தென்காசி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.