கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சுக்கு அண்ணாமலை கண்டனம்
1 min read
Annamalai condemns petrol bomb attack in front of Governor’s House
25.10.2023
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிப்பதாக பாஜக மாநிலை தலைவர் அண்ணாமலை கூறினார்.
குண்டு வீச்சு
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்.
கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் உள்ள பாஜக தமிழ்நாடு தலைமை அலுவலகத்தைத் தாக்கிய அதே நபர்தான் இன்று ராஜ்பவன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தொடர் தாக்குதல்கள், திமுக அரசுதான் இந்தத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் அடுத்து திசை திருப்புவதற்கு தயாராகி வருகிறார்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.