ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு- ரவுடி கைது
1 min read
Gasoline bomb attack in front of Governor’s House – One person arrested
25.10.2023
சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குண்டு வீச்சு
சென்னை, கிண்டியில் கவர்னர் மாளிகை உள்ளது. அங்கு எப்போதும் போலீஸ் உண்டு. பாதுகாப்பு மிகுந்த கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் வந்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டை வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என ” கருக்கா” வினோத் கோஷமிட்டதாக தகவல் வெளியானது.
விசாரணையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியவர் பெயர் வினோத் என்பது தெரியந்தது. அவரிடம்ம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வினோத் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி. அவரிடம் விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிடிப்பட்ட வினோத் கடந்த 2022ல் தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டார்.
மேலும், கமலாலயம் மீது குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான் என வினோத் அப்போது வாக்குமூலம் அளித்திருந்தார்.
அண்ணாமலை, தனக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை போலீசாரிடம் வினோத் ஒப்படைத்திருந்தார்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்று வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, ஆளுநர் மாளிகை முன் கூடுதல் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி
இந்த நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசபட்ட சம்பவத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
ஜனாதிபதி 2 நாள் பயணமாக சென்னை வருகிறார். நாளை சென்னை வரும் குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகையில் தங்கி அதன் பின்பாக 27-ம் தேதி OMR சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் குடியரசு தலைவரை ஆளுநர் மாளிகையில் தங்க அனுமதிப்பார்களா என்ற கேள்வியெழுந்தது. இதற்கு சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகம், சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகிய இருவரும், இந்த பெட்ரோல் வெடிகுண்டு சம்பவத்தல் தற்போது வரை குடியரசு தலைவர் வருகையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகையிலேயே தங்குவார் என தெரிவித்துள்ளனர், மேலும் பெட்ரோல் வெடிகுண்டு சம்வத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் குறித்த கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. கருக்கா வினோத் தற்போது பெட்ரோல் வெடிகுண்டு வீசியது நான்காவது சம்பவம் என கூறப்படுகிறது. 2015-ம் ஆண்டு தியாகராய நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசியது முதல் சம்பவமாக கூறப்படுகிறது. 2017-ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் இதே போல் பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளார். தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வில் பாஜகவின் நிலைபாடு தனக்கு பிடிக்கவில்லை என கூறி பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்.
தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் தங்குவதற்கன பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளபட்டுவருவதாகவும், இந்த வெடிகுண்டு சம்பவத்தால் எந்த ஒரு மாற்றமும் இல்லை எனவும் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.