குற்றாலம் அருகே போலீஸ் காரருக்கு கத்தி குத்து-2 பேர்கைது
1 min read
2 arrested for stabbing a policeman near Courtalam
4.11.2023
குற்றாலம் அருகே போலீஸ் காரரரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது.. இதில் இரண்டு பேர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வந்த ஆட்டோவைவும் பறிமுதல் செய்தனர்.மேலும் இரண்டு நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நமச்சிவாயம் இவரது மகன் தினேஷ்குமார் (வயது 36) இவர் ஆய்க்குடி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று விஜயகுமார் தனது விவசாய நிலத்தில் உறவினர் விஜயகுமார் என்பவருடன் சென்று விவசாய பணிகளை மேற்கொண்டுள்ளார். வேலை முடிந்த நிலையில் விஜயகுமார் தனக்கு மது வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதனால் தினேஷ்குமார் தனது பைக்கில் விஜயகுமாரை ஏற்றிக்கொண்டு குற்றாலம் புலிஅருவிப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளார். விஜயக்குமார் மது வாங்க சென்ற போது டாஸ்மாக் கடைக்கு அருகில் ஒரு ஆட்டோவில் சிலர் இருந்துள்ளனர். அப்போது விஜயகுமார் ஆட்டோவை கொஞ்சம் ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது இதனை பார்த்த போலீஸ்காரர் தினேஷ்குமார் தகராறு செய்தவர்களை சத்தம் போட்டு உள்ளார் அப்போது ஆட்டோவில் இருந்தவர்கள் ஆத்திரம் அடைந்த நிலையில் ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் தினேஷ் குமாரை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தினேஷ்குமார் உடனடியாக தென்காசியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி வழக்கு பதிவு செய்து ஆட்டோவில் வந்த தென்காசி மலையான் தெரு பகுதியைச் சார்ந்த பிச்சையா என்பவரது மகன் மணி என்ற பிஸ்தா மணி, மேலகரம் தெப்பக்குளம் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் தங்கப்பாண்டி, ஆகிய இருவரையும் கைது செய்து அவர்கள் வந்த ஆட்டோ வையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மணி, குற்றாலம் பகுதியைச் சேர்ந்த மாரித்துரை ஆகிய இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.