தென்காசி அருகே சொத்து தகராறில் வாலிபர் கொலை- 3 பேருக்கு ஆயுள்தண்டனை
1 min read
Youth killed in property dispute near Tenkasi – Life imprisonment for 3 people
4.11.2023
தென்காசி அருகே சொத்து தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில்
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு தென்காசி நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள மருதுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி இவரது அண்ணன் அருமைக் கனி (வயது 70) இவர்கள் இருவருக்கும் இடையே குடும்பச் சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் சமுத்திரக்கனியின் ஒரே மகனான திருமலை குமார் (வயது 18) என்பவரை மட்டும் கொலை செய்துவிட்டால் சொத்து முழுவதும் தனக்கு வந்துவிடும் என்று எண்ணியுள்ளார்.
இந்நிலையில் கடந்த
31.12.2014 அன்று அருமைக் கனி அவரது மனைவி ராஜாத்தி மற்றும் அவரது மகன் காமராஜ் ஆகிய மூன்று பேரும் சமுத்திரக்கனியின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த திருமலை குமாரை அறிவாளால் சரமாரியாக வெடியுள்ளனர். இதில் திருமலைக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அருமைக்கனி ராஜாத்தி, காமராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா காமராஜ், அவரது தந்தை அருமைக்கனி, தாயார் ராஜாத்தி ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் மாவட்ட கூடுதல் அரசு குற்றத்துறை வழக்கறிஞர் வேலுச்சாமி ஆஜரானார்.