ரெய்டு மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆவேசம்
1 min read
Can’t threaten DMK with raids: Chief Minister M K Stalin’s obsession
5.11.2023
ரெய்டு மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
மு.க.ஸ்டாலின் உரை
திருவள்ளூரில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் உடல்நலக்குறைவால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
அந்தக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உரையை அமைச்சர் உதயநிதி வாசித்தார். முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உரையில் இடம் பெற்ற விவரங்கள் வருமாறு:-
ரெய்டு மூலமாக அதிமுகவை மிரட்டி, நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல திமுகவையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கும் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயப்படும் இயக்கம் அல்ல திமுக. 75 ஆண்டு காலமாக இதையெல்லாம் எதிர்த்து நின்றுதான் வெற்றி பெற்று இருக்கிறோம்.
பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாகவே வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் செயல்படுகிறது. அமலாக்கத்துறைக்கும் வருமான வரித்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.