தென்காசி மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய காவல் ஆய்வாளர்
1 min read
Police inspector awarded scholarship to Tenkasi student
5.11.2023
தென்காசியில் ஏழை மாணவிக்கு காவல் ஆய்வாளர் கே.எஸ்.பால முருகன் மனிதாபிமானத் தோடு கல்விஉதவித்தொகை வழங்கினார்.இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி
இரண்டாம் ஆண்டு வருகிறார்.
இந்நிலையில் தேர்வுக்கு பணம் கட்ட முடியாமல் கல்வியை தொடர முடியாமல் தென்காசி ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகனிடம் பணம் உதவி கேட்டு வந்துள்ளார். அவரது குடும்ப வறுமை காரணமாக தென்காசி காவல் ஆய்வாளர் கே.எஸ்.பாலமுருகன் அந்த மாணவியின் இரண்டாம் ஆண்டு தேர்வுக்கட்டண தொகையான ரூபாய் 10 ஆயிரத்தை மாணவியிடம் உடனடியாக வழங்கி உதவி செய்துள்ளார்,
மேலும் வேலையில்லாமல் இருந்த அவருடைய அண்ணன் பட்டதாரியான செல்வ கணேஷ் தென்காசியில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து கொடுத்து அந்த குடும்ப கஷ்டத்தை போக்கியுள்ளார். ஆய்வாளர் பாலமுருகனின் இந்த மனிதாபிமானமிக்க செயல் மக்கள்மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையறிந்த சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தென்காசி ஆய்வாளர் கே எஸ். பாலமுருகனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.