விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மின்கம்பி அறுந்ததால் ஒரு மணி நேரம் சேவை பாதிப்பு
1 min read
Power cut at Wimco Nagar Metro station causing service disruption for one hour
6.11.2023
சென்னை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிணையத்தில் வண்ணாரப் பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரக்கூடிய பாதையில் உயர் மின் அழுத்த கம்பி விப்ரோ ரயில் நிலையத்தில் அறுந்து விழுந்துள்ளது.
இதனால் விம்கோ நகரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மெட்ரோ ரயில் மற்றும் அதேபோல் விமான நிலையம் மார்க்கமாக வரக்கூடிய மெட்ரோ ரயில்களும் சுங்கச்சாவடி மெட்ரோ ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அருந்த மின் கம்பியை மெட்ரோ ரயில் ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு மணி நேரம் பாதிப்புஏற்பட்டது.
இருதடங்களிலும் மெட்ரோ நிர்வாகம் காலதாமதமாக ரயில்களை இயக்கினர். இதனால் பயணிகள் ஆட்டோ மற்றும் பேருந்துகளில் பயணம் செய்தனர்.