ராணிப்பேட்டையில் காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய சூப்பிரண்டு
1 min read
The Superintendent gave certificates of appreciation to police inspectors in Ranipet
6.11.2023
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல் ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி (ஆற்காடு நகர காவல் நிலையம்), பார்த்தசாரதி (ராணிப்பேட்டை காவல் நிலையம்),காண்டீபன் (கலவை காவல் நிலையம்), சாலமன்ராஜா (ஆற்காடு கிராமிய காவல் நிலையம்),மணிமாறன் (காவேரிப்பாக்கம் காவல் நிலையம்) சசிகுமார் (ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு) மற்றும் லதா (அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு), உதவி ஆய்வாளர்கள் அண்ணாமலை (ராணிப்பேட்டை காவல் நிலையம்), அருள்மொழி (அவலூர் காவல் நிலையம்), தமிழ்செல்வி (ஆற்காடு நகர காவல் நிலையம்),.ரமேஷ் (வாழைப்பந்தல் காவல் நிலையம்), மகாராஜா (வாலாஜா காவல் நிலையம்), தலைமை காவலர்கள் கெஜலக்ஷ்மி (ராணிப்பேட்டை காவல் நிலையம்), கோமதி (வாழபந்தல் காவல் நிலையம்),வசந்தி (ஆற்காடு நகர காவல் நிலையம்) மற்றும் மதன்குமார் (அவலூர் காவல் நிலையம்), முதல் நிலை காவலர் ஜாவித்கான் (வாலாஜா காவல் நிலையம்) ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. D.V. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
-செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..