கடையம் பள்ளியில் மண்டல அளவிலான சிலம்பம் போட்டி
1 min read
Last school district level cymbal competition
7.11.2023
தென்காசி மாவட்டம் கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவிலான தற்காப்பு கலை சிலம்பம் போட்டி நடைபெற்றது.
சிலம்ப போட்டி
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கடையத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்ப போட்டியை ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடையம் தெற்கு ஒன்றிய திமுக ஆ.செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு சிலம்பாட்ட கழக உறுப்பினர் பாப்பையா முன்னிலை வகித்தார்.
விருதுநகர்,திருநெல்வேலி,தென்காசி மாவட்டங்களில் உள்ள 50 பள்ளிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நடுவர்களாக கணேசன், முருகேஸ்வரி, பாலமுருகன், தெய்வகனி, முத்துகுமார் ஆகியோர் இருந்து போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மற்றும் திமுக நிர்வாகிகள் சசிகுமார், சுரேஷ்,விஜயேந்திரன், மகேஷ் பாண்டியன், தகவல் தொழில் நுட்ப அணி சுரேஷ், அர்ஜுனன், தருமபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜன்னல் சதாம், சிவசைலம் பஞ்சாயத்து தலைவர் மலர்விழி சங்கரபாண்டியன், அந்தியூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் ராகவேந்திரன், சுந்தரம், கிருஷ்ணன், நாராயணன், சதீஷ்குமார்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.