கடையம் அருகே பள்ளி மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி
1 min read
Anti-plastic rally by school students near shop
8/11/2023
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாதா பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமின் 5 -வது நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு (நெகிழி) விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் தங்கராஜன் வரவேற்று பேசினார். ஆசிரியை தமிழரசி தலைமை தாங்கினார். இளஞ் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஆசிரியை ஜெயராணி, தேசிய பசுமைப்படை சாந்தி மோசஸ் சாரண சாரணியர் இயக்கம் மோசஸ் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை ஆசிரியர் அமிர்த சிபியா மற்றும் உதவி தலைமை ஆசிரியைகள் வெங்கடலட்சுமி, ரெஜினா தெரசாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியை வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஸாருகலா ரவி தொடங்கி வைத்தார். பேரணி கோவிலூற்று, மாதாபட்டணம் பகுதியில் நடைபெற்றது. துணிப்பையை பாளை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணி சாமி வழங்க வார்டு உறுப்பினர் குருசாமி பெற்றுகொண்டார். உதவி திட்ட அலுவலர் அருள் பீட்டர் ராஜ் நன்றி கூறினார் . நிகழ்ச்சியை திட்ட அலுவலர் அந்தோணி துரைராஜ் , நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.