தென்காசி அருகே மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி
1 min read
2 killed in electrocution near Tenkasi
9.11.2023
தென்காசி அருகே நேற்று ஒரே நாளில் ஒரு பெண் மற்றும் விவசாயி ஆகிய இரண்டு பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் , பெத்தநாடார்பட்டி அருகே உள்ள பொட்டலூர் பகுதியைச் சார்ந்த விவசாயி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாவூர்சத்திரம் பெத்தநாடார்பட்டிஅருகே உள்ள பொட்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி இவரது மகன் ஜெயக்குமார் (வயது 45) இவர் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கடையம் அருகே உள்ள மனத்தேரியில் அவரது அண்ணன் தங்கவேலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பம்பு செட் அறைக்குள் பல்பை போடுவதற்கு முயன்ற போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த கடையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதைப் போலவே தென்காசி திருநெல்வேலி சாலையில் உள்ள சீதபற்பநல்லூர் அருகே உள்ள புதூர் அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்த சுடலைமாடன் என்பவரது மகள் இசக்கியம்மாள் (வயது 53) நேற்று முன்தினம் மாலை பசுமாட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மின்கம்பத்தை இசக்கியம்மாள் தொட்டு ள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி சீதபற்பநல்லூர் போலீசார்
இடத்திற்கு விரைந்து சென்று இசக்கியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.