இலங்கை சிறையில் இருந்த 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை
1 min read
38 fishermen from Tamil Nadu jailed in Sri Lanka released with conditions
9.11.2023
நேற்று 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் இன்று 38 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை சிறையில் இருந்த 38 தமிழக மீனவர்கள் இன்று நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். நேற்று 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் இன்று 38 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 67 தமிழக மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் வைக்கப்பட்ட நிலையில் அதில் 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.