July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

9-ம் வகுப்பு மாணவியை 2 ஆண்டாக சீரழித்து கர்ப்பிணியாக்கினார்கள்- வாலிபர், மாணவன் கைது

1 min read

Class 9 girl was raped for 2 years and got pregnant – teenager, student arrested

9.11.2023
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23) என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்தார். அப்போது மாணவியுடன், ஆரோக்கியராஜ் நெருங்கி பழகினார். மேலும் காதலிப்பதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது மாணவியுடன் ஆரோக்கியராஜ் உல்லாசமாக இருந்தார். தொடர்ந்து அவர் காதல் ஆசை காட்டி மாணவியுடன் நெருக்கமாக இருந்தார்.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுவன் மற்றும் சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) ஆகிய இருவரும் நெருங்கி பழகினர். அவர்கள் மாணவியின் காதல் விவகாரம் தெரிந்து இதுபற்றி வெளியில் சொல்லி விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் காதல் ஆசைவார்த்தை கூறி மாணவனும், ஆரோக்கியராஜூம் மாணவியை சீரழித்தனர். பயந்துபோன மாணவி தனக்கு நேர்ந்து வரும் கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்தார்.

கர்ப்பம்

இதற்கிடையே கடந்த 3-ந்தேதி வீட்டில் இருந்த மாணவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றபோது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாணவியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் விசாரித்தபோதுதான் ஆரோக்கியராஜ், மாணவன் மற்றும் சுகுவனேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து மாணவியை சீரழித்து வந்தது தெரிந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆராக்கியராஜ், மாணவனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுகுவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.

விசாரணையில் மாணவியை கடந்த 2 ஆண்டாக அவர்கள் தொடர்ந்து சீரழித்து வந்திருப்பது தெரியவந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.