ஜனவரி 5-ந் தேதியில் இறுதி வாக்காளர் பட்டியல் – தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்
1 min read
Final voter list on 5th January – Returning Officer Satyapratha Sahu informs
9/11/2023
மின்னணு வாக்கு எந்திரங்களைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான அனைத்து எந்திரங்களும் தமிழகத்திற்கு வந்துள்ளன என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
வாக்காளர் பட்டியல்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், அதற்காக வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் கமிஷனின் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இன்னும் நமக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஜனவரி 5-ந் தேதியில்தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
மின்னணு வாக்கு எந்திரங்களைப் பொறுத்தவரை, நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையான அனைத்து எந்திரங்களும் தமிழகத்திற்கு வந்துள்ளன. மின்னணு வாக்கு எந்திரங்களில் அவசரகதி சோதனைகளை முடித்துள்ளோம். அவை அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல்களை வெப் காஸ்டிங் மற்றும் வீடியோகிராபி மூலமாக கண்காணிப்பது, மைக்ரோ அப்சர்வர் மற்றும் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.