July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்

1 min read

I will not apologize for talking about Sanathanam- Minister Udayanidhi Stalin’s obsession

9/11/2023
சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.

உதயநிதி ஸ்டாலின்

கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி., மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

வாழ்த்து

நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும் போது ஒரு பக்கம் தாய்மார்கள் தம்பி தீபாவளி வாழ்த்துகள் என்று சொல்லி வரவேற்றார்கள், நான் வாழ்த்துகள் வாழ்த்துகள் என்று சொன்னேன்.
மற்றொரு பக்கம் தி.மு.க.இளைஞரணி நிர்வாகிகள் பெரியார் வாழ்க பெரியார் வாழ்க என்று சொல்லி வரவேற்றார்கள்.

இது தான் திராவிட மாடல். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் அரசு.

சென்னையை அழகாக பராமரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மகிழ்ச்சி. கட்சி நிர்வாகிகளின் உழைப்பு தான் காரணம்.

தூய்மை பணியாளர்கள்

சென்னையில் 2019 ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், அதன்பிறகு வந்த சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற காரணம் நீங்கள்தான். அதே போல் 2024 பாராளுமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.
சென்னை இன்று சென்னையாக இருப்பதற்கு முக்கியமான காரணம் தூய்மை பணியாளர்கள் தான். நாம் சென்னையில் தூய்மையான காற்றை சுவாசிக்க காரணம் தூய்மை பணியாளர்கள். காலையில் முதலில் வேலைக்கு செல்வது தூய்மை பணியாளர்கள். வெயில், மழை பார்க்காமல் உழைப்பவர்கள் தூய்மை பணியாளர்கள்.

சென்னை என்ற குழந்தையை பார்த்து கொள்ளும் தாய் தூய்மை பணியாளர்கள்.

மன்னிப்பு கேட்கமாட்டேன்

சனாதனம் பற்றி பேசுவதை விமர்சிக்கிறார். சனாதனம் குறித்து நான் பேசியது பேசியது தான். நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று சொன்னார்கள், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. சட்ட ரீதியாக சந்தித்து கொள்வோம், நான் எந்த ஒரு மதத்தையும் இழிவுப்படுத்தி பேசவில்லை.
சமூக நீதி வேண்டும், அனைவரும் சமம் என்பதற்காக தான் நான் பேசினேன். நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் பையன், கலைஞர் பேரன், பேசியது பேசியது தான். கொள்கையை தான் பேசினேன், பேசியதிலிருந்து பின் வாங்கமாட்டேன். எது வந்தாலும் தொண்டர்கள் நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.