அயோத்தியில் 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை
1 min read
22 lakh Akal lamps lit in Ayodhya, a Guinness record
12.11.2023
உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் கடந்த 2017-ல் பதவியேற்றதும் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் ‘தீபோத்சவ்’ எனப்படும் தீபத் திருவிழாவை அறிவித்தார். அந்த ஆண்டு, அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் 51,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
தொடர்ந்து 2019-ம் ஆண்டு 4.10 லட்சம் விளக்குகள், 2020-ம் ஆண்டு 9 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகள் ஏற்றப்பட்டன.
கடந்த 2022-ம் ஆண்டு அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று அயோத்தியில் 22.23 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த தீபத் திருவிழாவில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
இதற்கான கின்னஸ் சாதனை சான்றிதழ் முதல் மந்திரி யோகி ஆதித்ய்நாத்திடம் வழங்கப்பட்டது.