நவம்பர் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min read
Low pressure area on November 14- Meteorological Department information
12.11.2023
வங்கக் கடலில் நவம்பர் 14ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 14, 15ம் தேதிகளில் கடலோர ஆந்திரா, தென் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
14, 15ம் தேதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.