பட்டாசு வெடிக்கும்போது உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் – முதல்-அமைச்சர் உத்தரவு
1 min read
Rs 3 lakh compensation to family of girl who died in firecracker explosion – Chief Minister orders
13.11.2023
பட்டாசு வெடிக்கும்போது உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதி, திமிரி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் சிறுமி நவிஷ்கா (வயது 4) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயும், இவ்விபத்தின்போது பலத்த காயமடைந்த விக்னேஷ் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.