கடையம் அருகே விஷப்பூச்சி கடித்து இளம்பெண் பலி
1 min read
A young girl died of venomous insect bites near Kadayam today
19.11.2023
கடையம் அருகே இன்று விஷப்பூச்சி கடித்து இளம்பெண் இறந்தார்.
விஷப் பூச்சி
கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்தவர் சுரேஷ். விவசாயி. இவரது மகள் சித்ரா(வயது 17). இவர் 10-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு சித்ரா தனது பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 1 மணிக்கு அவரை விஷப்பூச்சி ஒன்று கடித்தது. உடனே எழுந்த சித்ரா வலி தாங்க முடியாமல் அலறினார். மேலும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
உடனே அவரை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசிக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்கைக்காக அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.