தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்.
1 min read
Former Tamil Nadu Governor Fatima Bivi passed away.
23.11.2023
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி காலமானார்.
பாத்திமா பீவி
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 96.
அவர் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட பாத்திமா பீவி, உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றவர். பாத்திமா 1997 முதல் 2001 வரை தமிழக ஆளுநராக பதவி வகித்துள்ளார் .