ஜம்மு- காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை
1 min read
Pakistani terrorist shot dead in Jammu and Kashmir
23.11.2023
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள காலகோட் காட்டுப் பகுதியில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், பயங்கிரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
நேற்று இருந்து நடைபெற்றும் வரும் சண்டையில் இந்திய வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இதில் இருவர் அதிகாரிகள் ஆவர். இருந்தபோதிலும், வீரர்கள் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் இருந்து பின்வாங்கவில்லை.
இறுதியாக இன்று 2-வது நாள் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
பயங்கரவாதியின் பெயர் குவாரி எனத் தெரியவந்துள்ளது. இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர் பதவி வகித்த பாகிஸ்தான் பயங்கரவாதி எனத் தெரிய வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் மீண்டும் பயங்கரவாதத்தை புதுப்பிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குகைகளில் மறைந்து இருந்து ஐஇடி-யை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர், துப்பாக்கிச்சுடும் பயற்சி பெற்றவர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர்” என ஜம்முவின் பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.