மணல் குவாரி பற்றி அரசு ஊழியர்களை விசாரிக்காமல் தி.மு.க. தடுப்பது ஏன்? அண்ணாமலை கேள்வி
1 min read
DMK without questioning government employees about sand quarrying. Why block?
24.11.2023
மணல் குவாரி பற்றி அரசு ஊழியர்களை விசாரிக்காமல் திமுக அரசு முயற்சிப்பது ஏன்? என்று அண்ணாமலை கூறினார். மணல் குவாரி தமிழகத்தில் மணல் அள்ளப்பட்ட விவகாரம் குறித்து வேலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் கலெக்டர்களாக இருந்தவர்கள் என 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும். ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க., அரசின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டிய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற தி.மு.க.,வின் நடுக்கத்தைத்தான் உணர்த்துகிறது. மணல் குவாரி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை விசாரிக்காமல் தடுக்க, திமுக அரசு முயற்சிப்பது ஏன்? தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, வேண்டுமென்றே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு, அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகிவிடும் என்று ஊழல் திமுக அரசு பயப்படுகிறதா? இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.