ஆலங்குளம் உலக மீட்பர் ஆலயம் பெருவிழா தேர்பவனி
1 min read
Alankulam World Redeemer Temple Great Celebration
26.11.2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பழமை வாய்ந்த உலக மீட்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் மாலை சிறப்பு திருப்பலி, இறைமக்களுக்கு அசன உணவும் வழங்கப் பட்டது. நேற்று முன்தினம் நற் கருணை பவனி நடை பெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலை பங்கு ஆலயத்தில் வெய்கா லிப்பட்டி புனித ஜோசப் கல்வியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயலர் அருட்பணி சகாய ஜான், பண்டாரகுளம் பங்குத் தந்தை அருட்பணி மிக்கேல் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி னர்.
இதைதொடர்ந்து திருத்தேர் அர்ச்சிக்கப்பட்டது. உலக மீட்பர் திரு உருவ தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி ஆலங் குளம்-தென்காசி சாலை வழியாக அண்ணாநகர் மற்றும் ஆலங் குளத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சுற்றி வந்து ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனியில் இறைமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் உலக மீட்பர் ஆலயம் பங்குத்தந்தை அருட்பணி எஸ்.எம்.அருள் ராஜ் மற்றும் வின்சென்ட் தே பவுல் சபை இறை மக்கள் செய்திருந்தனர்.