தோரணமலையில் மராத்தான் ஓட்டப்பந்தயம்-கலெக்டர் பரிசு வழங்கினார்
1 min read
At Thoranamalai marathon race-collector prize
26.11.2023
தோரணமலையில் ஆரோக்கிய உணவை வலியுறுத்தி மராத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. வெற்றிபெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
மாரத்தான்
எம்.கே.வி.கே. – தோரணமலை முருகன்கோவில் சார்பில் மாரத்தான் போட்டி
நூற்றுக்கணக்கானோர் 10 கி.மீ. தூரம் ஓடினர்.
எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம், தோரணமலை முருகன்கோவில் நிர்வாகம் சார்பாக மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 600க்கும் மேற்பட்டோர் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடினர்.
மாரத்தான் போட்டி உலகம் முழுவதும் நடத்தப்படும் ஒரு விளையாட்டு. இதன் தோற்றம் கி.மு 490ம் ஆண்டு.
இந்த போட்டிகள் 1986 ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் இணைக்கப்பட்டுத் தொடர்ந்து நடந்து வருகிறது. 1986 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட போதும், முறையாக இந்த போட்டிகளுக்கான விதிமுறைகள் 1921ஆம் ஆண்டுதான் தொடுக்கப்பட்டது.
பெரும்பாலும் சர்வதேச போட்டிகளில் மினி மாரத்தான் போட்டிகளுக்கான தூரம் 10 கிமி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வெற்றியை சொல்ல ஓடிய இந்த போட்டியில் பங்கேற்றால் உடல் நலம் சிறப்படையும் என்பதோடு வாழ்வில் வெற்றியை காணலாம் என்ற நம்பிக்கை பலருக்கு உண்டு.
மேலும் தற்போது உலகம் முழுவதும் ஏதாவது ஒரு குறிக்கோளுடன் இந்தப்போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று தென்காசி அருகே குடும்ப மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. உன்னதமான உணவுமுறையுடன் ஆரோக்கியத்தை பேணுவதை வலியுறுத்தும் வகையில் இந்த மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இதனை எம்.கே.வி.கே. தொண்டு நிறுவனம், தோரணமலை முருகன்கோவில் நிர்வாகம் இணைந்து நடத்தியது.அதிகாலை சுமார் 6 மணி அளவில் தென்காசி அருகே மத்தளம் பாறையில் உள்ள ஷோகோ நிறுவனம் முன்பு போட்டி தொடங்கியது.

இதில் மாணவர்கள் இளைஞர்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினர். இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஓட்டப்பந்தயத்தை துவக்கி வைத்தார்
ஓட்டப்பந்தய வீரர்கள் திரவியநகர், மாதாபுரம் செக்போஸ்ட், கானாவூர், வழியாக தோரணமலையை அடைந்தனர். அவர்கள் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி வெற்றி எல்லையை அடைந்தனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் டி.சர்ட், சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கலந்துகொண்டு போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தோரணமலையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது
இந்தப்போட்டியில் முதலிடம் வந்த மாரிசரத் ரூ.10 ஆயிரம் பரிசை பெற்றார். 2-வதாக வந்த அஜித்குமார் ரூ.5 ஆயிரமும், மூன்றாவது வந்த பத்ரி நாராயணன் ரூ.3 ஆயிரமும் பரிசாக பெற்றனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம் கே வி கே தொண்டு நிறுவனம் பாலமுருகன் தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் ஆகியோர் செய்து இருந்தனர்.