June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டிசம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்தியர்கள், மலேசியாவில் தங்கியிருக்க விசா தேவையில்லை

1 min read

Indians do not require a visa to stay in Malaysia from 1st December to 30th December

27.11.2023
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியா முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வகையில் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வருவதற்கு விசா தேவையில்லை என மலேசியா அறிவித்துள்ளது. வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை இந்தியாவை சேர்ந்தவர்கள் மலேசியாவில் விசாயின்றி தங்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய மக்கள் நீதி கட்சியின் கூட்டத்தில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், எவ்வளவு நாட்களுக்கு அனுமதிக்கப்படும் என்பதை அவர் அவர் தெளிவாக குறிப்பிடவில்லை.
இருந்தபோதிலும், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் டிசம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தங்கியிருக்க விசா தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலோசியாவின் 5-வது மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. சீனா 4-வது இடத்தில் உள்ளது.
மலேசியாவில் கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 9.16 மில்லியன் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். சீனாவில் இருந்து 4,98,540 பேரும், இந்தியாவில் இருந்து 2,83,885 பேரும் சென்றுள்ளனர்.
முன்னதாக, தாய்லாந்து இந்தியா மற்றும் தைவான் குடிமக்கள் தங்களது நாட்டிற்று வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.