மு.க.அழகிரியின் மகன் அப்போலோவில் திடீர் அனுமதி
1 min read
Sudden admission in M.K.Azhagiri’s son Apollo
7.12.2023
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்ணனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தயாளு அம்மாளின் மூத்த மகன் மு.க.அழகிரி. இவர் திமுகவின் தென்மண்டல செயலாளராகவும், 2009 – 2014-ம் ஆண்டுகளில் மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இவரது மகன் துரை தயாநிதி, மதுரையில் தொழிலதிபராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். ‘மங்காத்தா’, ‘தமிழ்படம்’ உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களின் தயாரிப்பாளர் துரை தயாநிதி. இவர், அண்மைக் காலமாக திரைத்துறையில் இருந்து விலகியே இருந்தார்.
இந்நிலையில், நேற்று துரை தயாநிதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் மதுரையில் துரை தயாநிதி திமுக வேட்பாளராகப் போட்டியிடலாம் என செய்திகள் வெளியான நிலையில், அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மு.க.அழகிரி ஆதரவாளர்கள் மட்டுமின்றி திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.