தென்காசியில் 11ம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம்- மாவட்ட ஆட்சியர் தகவல்
1 min read
Gas consumer meeting in Tenkasi on 11th – District Collector informed
8/12/2023
தென்காசியில் வரும் 11ம் தேதி எரிவாயு நுகர்வோர் கூட்டம் நடைபெறுகிறது.
இதுபற்றி தென்காசி மாவட்டஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம், முறைகேடுகள் குறி்த்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர், எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் கூட்டம் 11.12.2023 அன்று மாலை 4.00 மணியளவில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.