June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை; 5 பேருக்கு வலைவீச்சு

1 min read

Real estate tycoon murdered in Nellai

8.12.2023
நெல்லை பாளையங்கோட்டை மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்தவர் சுருளிராஜன்(வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று முன்தினம் மாலை தனது காரில் கே.டி.சி. நகரில் இருந்து பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது பாளை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் வருமானவரி துறை அலுவலகம் கடந்து வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கார் மீது தங்களது மோட்டார் சைக்கிளால் இடித்துள்ளனர். உடனே சுருளிராஜன் இடித்தது யார் என பார்க்க காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் குறித்து பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஹரிகரன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்.

மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுருளிராஜனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையில் கொலை நடந்ததா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சமீபத்தில் சுருளிராஜனின் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதால் இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.