பாஸ்போர்ட் சரிபார்ப்புக்கு வந்த பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்தது
1 min read
A woman who came for passport verification was shot in the head by an undercover inspector
9/12/2023
உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் இஷ்ரத். புனித பயணத்துக்காக சவுதி அரேபியா செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதற்கிடையே, அலிகாரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இஷ்ரத்தின் பாஸ்போர்ட்டு சரிபார்ப்பு பணிகள் நடந்து வந்தன.
இந்நிலையில், பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்காக இஷ்ரத் அலிகார் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அங்கு இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மா துப்பாக்கியை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது இன்ஸ்பெக்டர் மனோஜ் வைத்திருந்த துப்பாக்கி திடீரென சுட்டது. இதில் பாஸ்போர்ட் சரிபார்ப்பிற்கு வந்த இஷ்ரத் தலைமீது குண்டுபாய்ந்தது. உடனடியாக அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக போலீசார் இஷ்ரத்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இன்ஸ்பெக்டரை தேடி வருகின்றனர்.