ஏ.பி.நாடானூரில் புதிய கல்குவாரி அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
1 min read
Public strongly opposes construction of new quarry in AP Nadanur
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஏ.பி.நாடானூரரில் புதிய கல்குவாரி அமைக்க கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆலங்குளம் வட்டம் கடையம் ஒன்றியம் அணைந்தபெருமாள் நாடானூர் ஊராட்சியில் செல்லப்பிள்ளையார்குளம் பகுதியில் புதிய கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இந்த கருத்து கேட்பு கூட்டம் தென்காசி கோட்டாட்சித் தலைவர் லாவண்யா, மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சுயம்பு தங்கராணி, ஆலங்குளம் தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட , குவாரிக்கு அருகில் உள்ள கிராமங்களான செல்லப் பிள்ளையார்குளம், தீர்த்தாரபுரம், முருகாண்டியூர் , அணைந்த பெருமாள் நாடானூர், சிவஞானபுரம், சடையாண்டியூர், சங்கரன்குடியிருப்பு, புது காலனி, மடவார் விளாகம்,சிவநாடானூர், சொக்கலிங்கபுரம் போன்ற பல்வேறு கிராமங்களில் இருந்து கலந்து கொண்ட பொதுமக்கள் புதிய குவாரி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .
மேலும் கருத்துக்கணிப்பு கூட்டத்தை குவாரி அமைக்கும் கிராம பஞ்சாயத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே. மயிலவன் புதிய குவாரி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அப்போது அவர் இப்பகுதியில் ஏற்கனவே 100 மீட்டர் சுற்றளவுக்குள் இரு குவாரிகள் செயல்படுகின்றன. மேலும் இதே பகுதியில் இருநூறு மீட்டர் சுற்றளவுக்குள் மேலும் இரண்டு குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று அதில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நிலுவையில் உள்ளது.
மேலும் அதே பகுதியில் மீண்டும் ஒரு குவாரி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர் மயிலவன் குவாரி அமைவதற்கான பட்டா இடம் வேறு ஒருவர் பெயரிலும் குவாரிக்கான லைசென்ஸ் ஒரு கம்பெனி பெயரியிலும் இருப்பதாக குறிப்பிட்டு விவசாய நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலத்தில் குவாரி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அருகில் உள்ள குளங்களையும், மலைகளையும், நினைவுச் சின்னங்களையும், வரைவு அறிக்கையில் இருந்து மறைத்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உண்மையை மறைத்து இந்த வரைவு அறிக்கையை தயாரித்த நிறுவனத்தின் மீதும் குவாரி நிறுவனத்தின் மீதும் கோட்டாட்சித் தலைவர் தானாக முன்வந்து கிரிமினல் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் 300 மீட்டர் ஆழத்திற்கு குவாரிகள் இப்பகுதியில் தோண்டப்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தூண்டப்பட்டுள்ளனர் என்றும் எனவே சட்டத்திற்கு புறம்பாக இந்த குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்
மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைந்த பெருமாள் நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அருணாசலம், தெற்கு மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ், செல்வி, துப்பார்க்குடி ஊராட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன் , வழக்கறிஞா ரஞ்சித், அணைந்த பெருமாள் நாடானூர் சரவணராஜ், ராம்ராஜ், ராம்சிங் தீர்த்தாரபுரத்தை சேர்ந்த முத்துராமன், மாரிச்செல்வம், பாலமுருகன், சண்முகவேல், ஜெயஅரசன், மாரி, அந்தோணி செல்லப்பிள்ளை யார்குளம் சின்னதம்பி, ராஜபூபதி,பாலமுருகன், காளிமுத்து, குட்டி, தங்கராஜா, முருகாண்டியூர் காளிமுத்து ஆசிரியர், ராமநாராயணன் சிவஞானபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி சடையாண்டியூர் அருணாசலம், ஆறுமுகம், செல்லத்துரை, சின்னத்துரைமேலும் வந்திருந்த அனைத்து பொதுமக்களும் கோரிக்கையை எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை கூறினார் ஆதரவாக ஒருவரும் கருத்து கூறவில்லை இதை பதிவு செய்து கொண்ட கோட்டாட்சித்தலைவர் இந்த கருத்து கேட்பு கூட்டத்தின் கருத்தை அரசுக்கு அனுப்பி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். கிராம நிர்வாக அலுவலர் நடராஜன், ஊராட்சி செயலர் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.