தாக்குதல் நடத்தியவர்களிடம் மைசூரு பா.ஜ.க. எம்.பி. பாஸ் பறிமுதல்
1 min read
Mysuru BJP told the attackers. MP Pass confiscation
13.12.2023
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மதியம் மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் எம்.பி.க்கள் இடத்திற்குள் குதித்தனர். அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் எம்.பி.க்கள் பதற்றம் அடைந்து ஓட ஆரம்பித்தனர். அதன்பின், பாதுகாவலர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
இதேபோல், பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 பேர் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளியேயும் பதற்றம் நிலவியது. தாக்குதல் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டனர்,
இந்நிலையில், தாக்குதல் நடத்திய ஆசாமிகளில் ஒருவரான சாகர் சர்மாவிடம் இருந்து மைசூரு பா.ஜ.க. எம்.பி.யான பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை பாஸ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது.