பிரதமர் வேட்பாளர் மல்லிகார்ஜுன கார்க்கே?- இந்தியா கூட்டணியில் பரபரப்பு
1 min read
4th Consultative Meeting of Allies of India in Delhi
19.12.2023
2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியின் முதல் மூன்று ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களில் நடைபெற்றன.
தெலுங்கானா, சத்தீஷ்கார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மத்தியப் பிரதேச தலைநகா் போபாலில் இந்தியா கூட்டணியின் நான்காவது கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்களான மம்தா பானர்ஜி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஷ் குமார், அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழல் நிலவியதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் 4-வது கூட்டம் டெல்லியில் டிசம்பர் 19-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் 4வது ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில்,சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, டி.ஆர்.பாலு. சீத்தாராம் யெச்சூரி, சரத்பவார், லாலு பிரசாத், நிதிஷ்குமார். மெகபூபா முப்தி, மம்தா பானர்ஜி. அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “எங்களின் இலக்கு வெற்றி தான். வெற்றிக்கு பிறகு தான் பிரதமர் யார் என முடிவு செய்யப்படும். பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பின் எங்களிடம் போதுமான எம்.பிகள் இருப்பார்கள். அதன் பிறகு ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்” என்றார்.