July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற வேண்டும்- பா.ஜ.க. நிர்வாகிகளிடம் மோடி வலியுறுத்தல்

1 min read

Need to get more votes in parliamentary elections – PM Modi BJP Emphasis on administrators

24.12.2023
பாராளுமன்றத்துக்கு இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 3-வது முறையாக வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் 3 பெரிய மாநிலங்களை கைப்பற்றியதால் பா.ஜனதா தலைவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்களை மேலும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தும் வகையில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இப்போதே பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை செய்ய தொடங்கி உள்ளனர்.

பா.ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பாளர்கள், மூத்த தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள்-முக்கிய நிர்வாகிகளின் 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது. முதல் நாள் பிரதமர் மோடி கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியினர் எப்படி செயலாற்ற வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி கூறினார்.
2-வது நாள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று தேர்தல் தொடர்பான வியூகங்களை பகிர்ந்து கொண்டார். இதனால் டெல்லியில் 2 நாட்கள் நடந்த பா.ஜனதா கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தோ்தலுடன் ஒப்பிடும்போது 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தோ்தலில் பா.ஜ.க. 6 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வாக்குகளைப் பெற்றது. பா.ஜ.க.வின் மொத்த வாக்கு 37 சதவீதமாக இருந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெற்றது.

2014-ம் ஆண்டு பாராளுமன்ற தோ்தலில் வெற்றி பெற்றது முதல் 50 சதவீத வாக்கு வங்கியை வசப்படுத்துவதை இலக்காகக் கொண்டு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. கடந்த பாராளுமன்ற தோ்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த தடவை வாக்கு சதவீதத்தை மேலும் 10 சதவீதம் அதிகரிக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். பிரதமர் மோடியும் முதல் நாள் கூட்டத்தில் இதையே வலியுறுத்தி பேசியதாக தெரிய வந்துள்ளது.
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதன் விவரம் வருமாறு:-
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தோ்தலில் பெற்றதைவிட 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தோ்தலில் 10 சதவீதம் கூடுதலாக வாக்குகளைப் பெற வேண்டும். இதற்காக பெண்கள், இளைஞா்கள், விவசாயிகள், ஏழை, எளிய மக்களை கட்சியினா் சந்தித்துப் பேச வேண்டும். தற்போது நடைபெற்று வரும் ‘வளா்ந்த இந்தியாவுக்கான உறுதியேற்பு யாத்திரை’ மூலம் முடிந்த அளவுக்கு அதிக மக்களை கட்சியினா் அணுக வேண்டும். மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் நலத்திட்ட உதவிகள், வளா்ச்சித் திட்டங்களை அவா்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.
கட்சியின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவா்கள் ஒரு சில குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல் கடந்த தோ்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். கட்சியினா் அனைவரும் துரிதகதியில் இலக்கை நோக்கிப் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு பிரதமா் மோடி பேசியதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டத்தில் அமித்ஷா பேசுகையில், ‘பாராளுமன்ற தோ்தலில் பா.ஜ.க.வின் செயல்பாடு எதிா்க்கட்சிகளை திகைப்படையச் செய்வதாக இருக்க வேண்டும். இந்தத் தோ்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக சவால் விடுவதற்கு எதிா்க்கட்சிகள் ஒருமுறைக்கு பலமுறை யோசிக்கும் நிலையை உருவாக்க வேண்டும்’ என்றார்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சியினா் பல்வேறு பொய்ப் பிரசாரங்களில் ஈடுபடுவார்கள், தவறான தகவல்களைப் பரப்புவார்கள். இதை நம்பி மக்கள் ஏமாற அனுமதிக்கக் கூடாது. பிரதமா் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பாளர் என்ற உறுதியான நம்பிக்கையை மக்கள் மனதில் உருவாக்க வேண்டும். இதற்காக வாக்குச் சாவடி அளவிலான களப் பணிகளை வலுப்படுத்த வேண்டும். கட்சியின் தொண்டா்கள் தங்களால் முடிந்த அளவுக்கு அதிக அளவிலான மக்களைச் சந்தித்து ஆட்சியின் சிறப்புகளை அவா்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

அண்மையில் மூன்று மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பெற்ற வெற்றி கட்சியினருக்கு உற்சாகத்தையும், மக்கள் மத்தியில் பா.ஜ.க. குறித்த நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் அதிகரித்துள்ளது. இவை பாராளுமன்ற தோ்தலில் நமக்கு சாதகமான விஷயங்கள். மேலும், ஜனவரி மாதம் நடைபெறும் அயோத்தி ராமா் கோவில் பிரதிஷ்டை போன்றவை தோ்தலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கட்சியின் மூத்த தலைவா்கள் பேசியதாக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறியுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.