உத்தர பிரதேச மாநில பொறுப்பாளராக பிரியங்காவுக்குப்பதில் சச்சின் பைலட்
1 min read
Sachin Pilot in Priyanka’s Uttar Pradesh State In-Charge
24.12.2023
காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக பொறுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இந்த மாற்றங்களை செய்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பொறுப்பாளராக அஜோய் குமார் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
உத்தர பிரதேச மாநில பொறுப்பாளராக இருந்து வந்த பிரியங்கா காந்தி அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அவினாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சச்சின் பைலட், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரமேஷ் சென்னிதலா, தமிழகம், புதுவை மாநிலத்திற்கு அஜோய்குமார் ஆகியோர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரா, அந்தமான் மாநிலங்களுக்கு மாணிக்கம் தாகூர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.