உத்திரகோசமங்கை நடராஜருக்கு சந்தனகாப்பு அகற்றம்-பக்தர்கள் தரிசனம்
1 min read
Removal of Chandanakapu to Uthrakosamangai Nataraja – Devotees darshan
26.12.2023
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் வளாகத்தில் மரகதக் கல் நடராஜர் சன்னதி உள்ளது. அதிர்வலையால் பாதிக்காமல் இருக்க இச்சிலை ஆண்டு முழுவதும் சந்தனகாப்பு அலங்காரத்தில்தான் இருக்கும். ஆனால் ஆருத்ரா தரிசன விழாக்காலத்தில் மட்டும் சந்தனகாப்பு அலங்காரம் கலைக்கப்படும்.
இந்த ஆண்டு ஆதிரை திருவிழா டிசம்பர் 18-ந் தேதி காப்பு கட்டுடன் துவங்கியது. இதைதொடர்ந்து
நேற்று காலை 8 மணிக்கு மேல் மரகத நடராஜர் திருமேனி சந்தனம் படி களைதல் நிகழ்வு நடந்தது. காலை 8:30 மணிக்கு மேல் நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 9 மணி முதல் தேவார இன்னிசை, பண்ணிசை, திருமுறை, பாராயணம் நடந்தன.
இதையடுத்து, சந்தனம் களைந்த நிலையில் அருள்பாலித்த
மரகத நடராஜரை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். நேற்றிரவு 10 மணிக்கு மேல் கூத்த பெருமான் கல்தேர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
இரவு 11 மணிக்கு மேல் நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் துவங்கியது. இன்று (டிச.27) அதிகாலை அருணோதய காலத்தில் ஆதிரை தரிசனம், அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு கூத்தர் பெருமான் வீதியுலா வருகிறார். மாலை 5 மணிக்கு மேல்
பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம்,
இன்றிரவு 8 மணிக்கு மேல் மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவை நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.