பாவூர்சத்திரம்: புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
1 min read
Paoorchatram: 3 people were arrested for smuggling tobacco products
4.1.2023
தென்காசி அருகே பாவூர்சத்திரம் பகுதியில் சட்டவிரோதமாக ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய மூன்று நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் மிருந்து 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் காவல் சரகத்தஇற்கஉ உட்பட்ட, சிவகாமிபுரம் பகுதியில் சார்பு ஆய்வாளர் டேவிட் ஸ்டீபன் தலைமையிலான காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
அந்த புகையிலை பொருட்களை கடத்தி வந்த கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த பூமாடன் என்பவரின் மகன் முருகன் (வயது 34), ஆரியங்காவூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (வயது 36) மற்றும் அறியப்பபுரம் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் முருகன் (வயது 40) ஆகிய மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்ட மூன்று நபர்களையும் நீதிபதி 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் அதன்படி மூன்று பேர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்
மேலும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் நேற்று தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 10 இடங்களில் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..