பூண்டி ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 1000 கன அடியாக அதிகரிப்பு
1 min read
ncrease in flow to Bundi Lake to 1000 cubic feet per second
9.1.2024
பூண்டி ஏரிக்கு 50 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரித்துள்ளது. அதே போல் உபரி தண்ணீர் முழுவதும் கொசஸ்தலை ஆற்றுக்கு திறந்து விடப்படுகிறது.
பூண்டி ஏரி
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் 35 அடி உயரத்தில். தற்போது 34.77 அடி உயரம் எட்டி உள்ளது. அதாவது 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 3073 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இந்த ஏரிக்கு வினாடிக்கு 190 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில்.
மதகுகள் வழியாக கொசஸ்த்தலை ஆற்றுக்கு 50 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுருந்தது.
தற்போது நீர்வரத்து ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கும் நிலையில் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 கன அடியில் இருந்து ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
-நிருபர் ஜெயஸ்ரீ