கடையம் வடபத்து குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
1 min read
The boy died after drowning in Vadapath Pond
9.1.2024
தென்காசி மாவட்டம் கீழக்கடையத்தைச் சோ்ந்த பாபநாசம். இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகன் கோகுல்(வயது11). இன்னொரு மகளும் இருக்கிறார்.
பாபநாசம் இறந்து போனதால் சுப்புலட்சுமி பூக்கட்டி இரண்டு குழந்தைகளையும் வளர்ந்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கோகுல் கடையத்தில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்புப் படிந்து வந்தான். அவன் நண்பர்களுடன் ராமநதிஅணைக்கு புறப்பட்டனர். வழியில் உள்ள வடபத்துக்குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். குளத்தில் குளித்துக் கொண்டிருந்த கோகுல் திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றுவிட்டார் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிவிட்டார்.
இது குறித்து காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடையம் காவல் ஆய்வாளா் கௌதமன், உதவி ஆய்வாளா் வேல்முருகன், தென்காசி தீயணைப்பு நிலைய சிறப்பு தீயணைப்பு அலுவலா் ஜெயரத்தினகுமார், ஜெயபிரகாஷ்பாபு ஆகியோர் தலைமையில் வீரா்கள் விஸ்வநாதன், கார்த்திகேயன், ஆறுமுகம், வெள்ளப்பாண்டி ஆகியோர் சென்று கோகுல் உலடை மீட்டனா்.
கடையம் போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் கோகுல் தாய் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனா்.
மகனின் உடலை பார்த்து தாய் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.