கோவிந்தப்பேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
1 min read
Equality Pongal Festival in Govindapperi Municipality
16.1.2024
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தப்பேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் தலைமையில் நடைபெற்றது
கோவிந்தப்பேரி ஊராட்சி அலுவலகத்தில் நேற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கோவிந்தப்பேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
இந்த விழாவிற்கு கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி கே. பாண்டியன் தலைமை தாங்கினார்.விழாவில் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் கரும்பு பழங்கள் போன்றவை வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இசேந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.இசக்கி பாண்டி, பி.இளவரசி, எம். பொன்னுத்தாய், வி.சுகிர்தா, வி.நாகராஜன்,ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன், சிங்கக்குட்டி, முத்துராஜ், சுப்பையா பாண்டியன், முருகையா பாண்டியன், மக்கள் நல பணியாளர் கிருஷ்ணன் மாரித்துரை, செந்தில்குமார், மீனா, லட்சுமி ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கோவிந்தப்பேரி ஊராட்சி செயலாளர் பா.மூக்காண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.