June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

அயோத்தி கும்பாபிஷேகம்-குற்றாலத்தில் பாஜக கொண்டாட்டம்

1 min read

Ram Temple Kumbabhishekam in Ayodhya – BJP Celebration in Kutalam

23.1.2024

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து
நேற்று தென்காசி மாவட்ட பாஜக சார்பில் குற்றால
பேருந்து நிலையம் அருகே ராமரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.அதனைத் தொடர்ந்து அருள்மிகு திருக்குற்றால நாதசுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன் தலைமை தாங்கினார்
தென்காசி மாவட்ட ஊடக பிரிவு தலைவர் தென்காசி தெற்கு ஒன்றிய பார்வையாளர் குற்றாலம் பி.செந்தூர்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே.ஏ. ராஜேஷ் ராஜா கலந்து கொண்டு சிறப்பு அன்னதானத்தை துவக்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் முருகன்,
தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி, அரசு தொடர்பு பிரிவுமாவட்ட தலைவர் எல்.ஜி.குத்தாலிங்கம், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன், முன்னாள் ஒன்றிய பொருளாளர் பிலேவேந்திரன்,
மாவட்ட ஊடகப்பிரிவு துணைத் தலைவர் பேஷன் குமார், தென்காசி ஒன்றிய வர்த்தக அணி தலைவர் நாராயணன், காசிமேஜர்புரம் பாஜக கிளை கமிட்டி முத்துப்பாண்டியன், நாகராஜ், வள்ளிநாயகம், சங்கர சட்டநாதன்,
உட்பட பலர் கலந்து கொண்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.