பாவூர்சத்திரத்தில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி
1 min read
District Level Chilambam Competition at Bhavoorchatra
5.2.2024
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி தெற்கு திமுக மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை
வே.ஜெயபாலன் பரிசு, மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
பாவூர்சத்திரத்தில் அகில இந்திய வீர கலைச்சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் வெங்கடேஸ்வரபுரம் ஜீசஸ் பள்ளி முதல்பரிசும், கோவிந்தபேரி கலைவாணி கல்வி மையம் 2வது பரிசும், பாவூர்சத்திரம் ஷாலோம் மெட்ரிக்குலேசன் பள்ளி 3வது பரிசும் பெற்றது.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், தொழிலதிபர் ஆர்.கே.விக்னேஷ் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தளபதி சிவராஜன் வரவேற்று பேசினார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன், பாவூர்சத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி பேசினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சீ.பொன்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் தளபதி முருகேசன், தமிழ்நாடு நாடார் உறவின் முறை கூட்டமைப்பு தலைவர் அகரகட்டு லூர்துநாடார், சமக ஒன்றிய செயலாளர் ராஜா, செல்வக்குமார், பயிற்சியாளர்கள் சேகர், ஹரிகரன், பாலசுப்பிரமணியன், சக்தி, பிரசாந்த், முண்டசாமி, லட்சுமி, மதுபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.