பற்களை அழகுப்படுத்த சென்ற மணமகன் மரணம்
1 min read
The groom who went to have his teeth beautified died
20.2.2024
தனது திருமணத்திற்காக, பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட லட்சுமி நாராயணா (28) என்பவர் உயிரிழந்த பரிதாபம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெற இருந்த தனது திருமணத்திற்காக கடந்த 16-ம் தேதி தனது பற்களை ஒழுங்குபடுத்த பல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் லட்சுமி நாராயணா.
பற்களை ஒழுங்குபடுத்தும் அறுவை சிகிச்சையின்போது நாராயணா மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் அவரின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே லட்சுமி நாராயணா உயிரிழந்துள்ளார்.
அதிக அளவில் மயக்க(Anesthesia) மருந்து அளித்ததாலேயே தனது மகன் உயிரிழந்ததாக மருத்துவமனை மீது அவரின் தந்தை புகார் அளித்துள்ளார். மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.