தென்காசி மாவட்டத்தில் நடந்த குற்ற சம்பவங்கள்
1 min read
Crime incidents in Tenkasi district
21.2.2024
தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கை பற்றிய செய்திகளை காணலாம்.
குற்றாலம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த தாய் – தந்தையை தாக்கிய மகன் கைது
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்தளம்பாறை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் மாரிமுத்து என்பவர் மது வாங்குவதற்கு தனது தாய் மற்றும் தந்தையிடம் பணம் கேட்டு பிரச்சனை செய்துள்ளார். அவர்கள் பணம் தர மறுத்ததால் அவர்களை அசிங்கமாக பேசியதோடு அவர்களை தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் குற்றாலம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாரிமுத்து விசாரணை மேற்கொண்டு மாரிமுத்து (வயது 24) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார்.
சட்ட விரோதமாக மது விற்பனை 3 பேர் கைது
தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் ஆறுமுகசாமி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்கு சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சிவகிரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிள்ளையார் என்பவரின் மகன் சீனிவாசன் (வயது 77) என்ற நபரையும், தேவிபட்டினம் காமராஜ் தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் முருகன் (வயது 35) ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூபாய் 400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சொக்கம்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்த முருகையா என்பவரின் மகன் குமார் (வயது 43) என்ற நபரை சார்பு ஆய்வாளர் உடையார்சாமி கைது செய்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 250/- பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 12 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்