பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மூளையில் சிப் பொருத்தம்
1 min read
Implantation of a chip in the brain of a stroke victim
21.2.2024
நரம்பியல் நிலைமைகள் அல்லது அதிர்ச்சிகரமான காயங்கள் உள்ள மனிதர்களின் மூளைக்குள் சிப் பொருத்தி, அவர்களை இந்த பாதிப்பில் இருந்து மீட்க எலான் மஸ்க் ‘நியூராலின்க்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப் பொருத்தும் முதல் முயற்சியின் முதற்கட்ட சோதனை வெற்றிக்கரமாக நடந்து முடிந்திருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கழுத்து பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பக்கவாத பாதிப்புக்கு ஆளான நோயாளிகளின் மூளையில் சிப் பொருத்தப்படும். இதன்மூலம் அவர்களின் எண்ணத்தின் அடிப்படையில் கம்ப்யூட்டரின் கர்சர் மற்றும் கீபோர்டு உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த முடியும்.
கடந்த 2016-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டத்தை மனிதர்களிடம் சோதனை செய்வதற்காக எலான் மஸ்க் அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றிருந்தார்.
அதன்படி பக்கவாதம் பாதிக்கப்பட்டு, இந்த சோதனையில் ஈடுபட தேர்வு செய்யப்பட்ட முதல் நபரிடம் ஆய்வு தொடங்கப்பட்டது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சிப் முதன்முதலாக வெற்றிகரமாக மனிதரின் மூளையில் பொருத்தப்பட்டது.
சிப் பொருத்தப்பட்ட நபர் தற்போது குணமடைந்து வருகிறார் என்றும் அவரது எண்ணங்களை பயன்படுத்தி கம்ப்யூட்டர் மவுசை கட்டுப்படுத்துகிறார் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.