ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
1 min read
Job placement camp at Sri Ram Nalamani Yadava College
21.2.2024
தென்காசி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தென்காசி தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
தென்காசி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்முதல்வன் திட்டத்தின கீழ் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இளங்கலை மூன்றாமாண்டு மாணவர்களுக்கு 20-02-2024 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர்.ந.மணிமாறன் தலைமைவகித்தார். கல்லூரியின் செயலர் பத்மாவதி மணிமாறன் முன்னிலை வகித்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை வாழ்த்தி, பணிநியமன ஆணையினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜார்ஜ் பிராங்ளின், இணை இயக்குநர் மாவட்ட திறன் வளர் பயிற்சி அலுவலர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்றுநர் தென்காசி, நான் முதல்வன் திட்ட மேலாளர் கல்யாண குமார், கௌசல்யா மாவட்ட தொழில் மைய அலுவலர் தென்காசி. நான் முதல்வன் திட்டத்தின் பயிற்சியாளர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.கோதர் முகைதீன், வரவேற்ப்புரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் எஸ்..ராமர் நன்றியுரை ஆற்றினார்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தென்காசி மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்நத 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். 25 மேற்பட்ட நிறுவனங்கள் வந்திருந்தனர். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்லூாயின் அனைத்து பேராசிரியர்களும் மாணவ, மாணவியருக்கு முகாமில் வழிகாட்டியாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டனர்.